கிறுக்கல்-8 | 04-01-2019

உன் மார்போடு என் முகம் பதித்து,
என் மரணம் வரை வாழ்வேன் பெண்ணே !
உன் தோளோடு என் தோள்கள் சேர்ந்து
இவ்வுலகை கடப்பேன் கண்ணே !!

உன் கால்விரல் பிடித்து என் காலங்கள்
கழிப்பேன் கண்ணே !
நீ ஒரு முறை சிரிக்க நான் பலமுறை
சிரிப்பேன் கண்ணே !!!

உன் மையிட்ட கண்களால் என் மதி
மயங்குதடி பெண்ணே !
உன் பார்வைக்காக என் உயிர்
கொடுப்பேன் கண்ணே !!

உன் கழுத்தில் மாலையிட என்
மனம் துடிக்குதடி பெண்ணே !
உன் கண்களில் கண்ணீர் கண்டால்
என் உயிர் துறப்பேன் கண்ணே !!

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment