கிறுக்கல்-33 | 11-01-2019

உன் சிரிப்பில் என் சிந்தனைகள் சிதற கண்டேன்,
நீ பேசும் வார்த்தைகள் அனைத்தும் வேதம் என்பேன்,
உன் இதழ் அசைவில் மதி மயங்கி நின்றேன்,
உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி போனேன்,
உன் ஒரு நிமிட பார்வைக்கு இதயம் ஏங்கி நின்றேன்,
நீ என்னை கடந்து போகையில் பலவித உணர்வுகள் கொண்டேன்,
உன்னுடன் வாழத்தானே இப்பிறவி கொண்டேன்...

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :