கிறுக்கல்-42 | 15-01-2019

நான் என்பதை தவிர்த்து,
நாம் என்பதை சேர்தல் நன்று.
எனது என்பதை தவிர்த்து
நமது என்பதை சேர்தல் நன்று.

தனித்து வாழ்வதை தவிர்த்து,
கூடி வாழ்தல் மிக நன்று.
ஏமாற்றி வாழ்வதை தவிர்த்து,
ஏமாற்றாமல் வாழ்தல் நன்று.

பகைத்து வாழ்வதை தவிர்த்து,
நட்போடு வாழ்தல் நன்று.
கவலையோடு வாழ்வதை தவிர்த்து,
கவலைகள் மறந்து வாழ்தல் நன்று.

கர்வம் கொள்வதை தவிர்த்து,
தன்னடக்கதோடு வாழ்தல் நன்று.
சினம் கொள்வதை தவிர்த்து,
அமைதியோடு வாழ்தல் நன்று.

பணத்திற்காக வாழ்வதை தவிர்த்து,
பாசத்திற்காக வாழ்தல் நன்று.
சேர்த்து வாழ்வதை தவிர்த்து,
கொடுத்து வாழ்வதே நன்று.

வாழ்வோம் ! வாழ விடுவோம் !!

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment