கிறுக்கல்-47 | 20-01-2019

கண்ணீரோடு தான் சென்றேன்,
முகம் தெரியா தேசத்திற்கு,
அனைத்திடவோ தாயில்லை,
மடிசாய மனைவியுமில்லை,

பசியென்று நான் அழுதால்,
கேட்டிடவோ யாருமில்லை,
கண்ணீரில் நான் நனையா,
நாளென்று ஏதுமில்லை.

உறவுகளைதான் பிரிந்து,
அடையாளங்கள் தனை மறந்து,
அவமானங்கள் தான் சுமந்து,
வாழ்கின்றேன் ! வேறு வழியில்லை !!!மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment