நான் கொண்ட தேவைகளோ சிறிது ! தேடல்களோ பெரிது !!
நான் கொண்ட அறிவோ சிறிது !
அன்போ பெரிது !!
நான் கொண்ட செல்வங்களோ சிறிது !
மனதோ பெரிது !!
நான் கொண்ட நண்பர்களோ சிறிது !
எதிரிகளோ பெரிது !!
நான் கொண்ட வெற்றிகளோ சிறிது ! தோல்விகளோ பெரிது !!
நான் கொண்ட தத்துவங்களோ மிக சிறிது !
அதன் ஆழங்களோ மிக பெரிது !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment


வாழ்வில்! இலக்கென்று எதுமில்லை ?
எட்டி பிடிப்பதற்கு !!!
வாழ்வில் ! இழப்பதற்கு எதுமில்லை ?
பயந்து பணிவதற்கு !!!
வாழ்வில் ! சோகங்கள் எதுமில்லை ?
சோர்ந்து போவதற்கு !!!
வாழ்வில் ! சுமையென்று எதுமில்லை ?
சுமந்து செல்வதற்கு !!!
வாழ்வில் !எனக்கென்று யாருமில்லை?
விட்டு விலகுவதற்கு !!!
வாழ்க்கையின்மேல் பெரியதொரு பற்றில்லை ?
வாழ்ந்து பார்ப்பதற்கு !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment

சற்றே தொலைவில்,
விண்மீன்களின் கூட்டத்தில்,
பிரகாசிக்கும் நிலவைப்போன்றொரு,
பெண்ணை கண்டேன்,
கண்டதும் காதலுற்றேன் !
அவளின் ஆற்பரிக்கும் அழகிற்கு அடிமையானேன் !
அவள் சிரிப்பில் சிக்கி நான்
சிதறி போனேன் !
நித்தம் அவள் சிந்தனையில்
மூழ்கிப் போனேன் !
பார்ப்பவர்கள் யாவரும் அவள்போல்
தோன்றிடும் மாயம் கண்டேன் !
எண்ணுள் புதுவித மாற்றம் கொண்டேன் !
இதுதான் காதலோ?இதுதான் காதலோ?

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment