வெற்றியை மட்டுமே நோக்கி பயணிப்பவனுக்கு?
தோல்வியின் மேல் எப்பொழுதும்
பயம் இருக்கும் !
வெற்றியும் ! தோல்விவும் !! சமமென
உணர்ந்தவன் என்றுமே ‌பயமறியான் !!!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment


விடியலுக்கு முன்னரே!விழித்தெழு தமிழா!!
உன் வியர்வை துளிகள்,
வெற்றிக்கு விதையாகட்டும் !!!

தடைகள் பொடிபட ! தன்மானம் காத்திட!
வீர்கொண்டு வா தமிழா !!
உன் வீரம் இவ்வுலகிற்கு சான்றாகட்டும்!!!

இரத்தம் கொதித்திட ! யுத்தும் புரிந்திட!
படைக்கொண்டு வா தமிழா !!
எழுச்சியில் எதிரிகள் பொடியாகட்டும் !!!

அநீதியை அழித்திட ! தர்மம் நிலைத்திட!
சீற்றிட்டு வா தமிழா !!
வேள்வியில் அதர்மங்கள் அழியட்டும் !!!

துயரங்கள் விலகிட‌‌ ! உயரங்கள் தீண்டிட!
உறுதிக்கொண்டு வா‌ தமிழா !!
உழைப்பில் இவ்வுலகை நீ ஆண்டிட :)


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment


பொய்மையை புறம்தள்ளி,
மெய்யின் பின்னோடும் மனமிது !
காரணங்களை தேடாமல்,
காரியங்களை நிறைவேற்றும் மனமிது !

அறிவை புறம்தள்ளி,
அன்பின் பின்னோடும் மனமிது !
குறைகளை தேடாமல்,
நிறைகள் நிறைந்திருக்கும் மனமிது !

அகந்தையை புறம்தள்ளி,
அன்போடு பழகும் மனமிது !
வலிகள் பல சுமந்தாலும்,
புன்னகையை மறவா மனமிது !

தோல்விகளை புறம்தள்ளி,
வெற்றியின் பின்னோடும் மனமிது !
தோல்விகள் தொடர்ந்தாலும்,
முயற்சியை கைவிடா‌ மனமிது !




Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment


வறுமையில் வாழ்வோரை வாழ்விக்க,
நாம் முயல்வோம் !
பிறர் வலி உணர்ந்து எப்பொழுதும்,
நாம் வாழ்வோம் !
தனிமையில் தவிப்போரை தாங்கிடவே,
நாம் சேர்வோம் !
துயரெதுவும் தொடராமல் வாழ்ந்திட,
நாம் வழிசெய்வோம் ‌!
துரோகத்தில் வீழ்ந்தோரை விழித்தெழவே,
நாம் முயல்வோம் !
அன்புக்கு ‌ஏங்குவோருக்கு அடைகளமாய்,
நாம் வாழ்வோம் !
அறம் செய்தே நம் வாழ்வை எப்பொழுதும்,
நாம் வெல்வோம் !




Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment


நேர்மையில் ஊறிய நெஞ்சிது,
அச்சம் அறியாதது !
உழைத்தே பழகிய கரமிது ,
ஏமாற்ற தெரியாதது !
தோல்விகள் பலசுமந்த தோளிது,
மற்றவர்களுக்கு பாரமாகதது !
முயற்சியை மூச்சென சுவாசிக்கும் உடலிது,
தோல்விகளுக்கு அஞ்சாதது !



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

நிறம் மாறும் மனிதர்கள் நடமாடும் பூமியில் !
நிஜம் தேடும் இதயமே ? சற்று‌ நில் !
முகமூடி அணியாமல் நீ வாழ்ந்தால்,
உன்னை உடைத்தெறியும் உலகிது !!

பணத்தின் பின்னோடும் மனிதர்கள் நடமாடும் பூமியில் !
குணம் தேடும் இதயமே ? சற்று‌ நில் !
பணம்யின்றி நீ வாழ்ந்தால்,
உன்னை துச்சமென தூக்கியெறியும் உலகிது!!

துரோகத்தில் ஊறிய மனிதர்கள் நடமாடும் பூமியில் !
நட்பை எதிர்நோக்கும் இதயமே ? சற்று‌ நில் !
உயிர் கொடுக்கும் நட்பாக நீ வாழ்ந்தால்,
உன்னை முதுகில் குத்தும் உலகிது !!

ஊழலில் ஊறிய மனிதர்கள் நடமாடும் பூமியில் !
நேர்மையை தேடும் இதயமே ? சற்று‌ நில் !
நீதி, நாயமென நீ  வாழ்ந்தால்,
உன்னை நிர்மூலமாக்கும் உலகிது !! 

அதிகாரத்தை விரும்பும் மனிதர்கள் நடமாடும் பூமியில் !
அன்பை எதிர்நோக்கும் இதயமே?சற்று‌ நில்
அன்புக்கு அடிமையாய் நீ வாழ்ந்தால்,
உன்னை அடக்கியாளும் உலகிது !!




Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment



நான் என்ற அகந்தையை ஒருபோதும்,
வளர்காதே !
மனிதர்கள் எல்லோரும் சமம் என்பதை,
ஒருநாளும் மறக்காதே !!

தவறு இழைத்தால் மண்டிடவும்,
தயங்காதே !
தவறு இழைக்காமல் தண்டித்தால், தட்டிக்கேட்க அஞ்சாதே !!

தன்மானத்தை எதற்காகவும் எப்பொழுதும்,
இழக்காதே !
தோல்விகள் தொடர்ந்தாலும்நம்பிக்கையை
கைவிடாதே !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

உயிருக்கு உயிராக உன்னை 
நினைத்தேன்,
உன் நினைவுகளை நெஞ்சோடு தான்
புதைத்தேன்.

உன்னை மறந்து வாழ்ந்திடத்தான் நான்
முயன்றேன்,
மறந்திட முடியாமல் நான் 
தவித்தேன்.

மைவிழியின் பார்வையில் நான்
வீழ்ந்தேன்,
கரையேற முடியாமல் நான்
தவித்தேன்.

சினம் கொண்ட வார்த்தைகளால் நான்
சிதைந்தேன்,
அதன் காயங்கள் ஆராமல் நான்
தவித்தேன்.

உன் நினைவில் எப்பொழுதும் நான்
வாழ்ந்தேன்,
நொடி‌பொழுதும் மறவாமல் நான்‌ 
தவித்தேன்.

கண்ணீரை காற்றோடு நான்
கறைத்தேன்,
காலங்கள் கடந்தபின்பும் காதலோடு நான்
காத்திருந்தேன்.




Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment