கிறுக்கல்-60 | 17-02-2019


பொய்மையை புறம்தள்ளி,
மெய்யின் பின்னோடும் மனமிது !
காரணங்களை தேடாமல்,
காரியங்களை நிறைவேற்றும் மனமிது !

அறிவை புறம்தள்ளி,
அன்பின் பின்னோடும் மனமிது !
குறைகளை தேடாமல்,
நிறைகள் நிறைந்திருக்கும் மனமிது !

அகந்தையை புறம்தள்ளி,
அன்போடு பழகும் மனமிது !
வலிகள் பல சுமந்தாலும்,
புன்னகையை மறவா மனமிது !

தோல்விகளை புறம்தள்ளி,
வெற்றியின் பின்னோடும் மனமிது !
தோல்விகள் தொடர்ந்தாலும்,
முயற்சியை கைவிடா‌ மனமிது !

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :