கிறுக்கல்-59 | 11-02-2019


வறுமையில் வாழ்வோரை வாழ்விக்க,
நாம் முயல்வோம் !
பிறர் வலி உணர்ந்து எப்பொழுதும்,
நாம் வாழ்வோம் !
தனிமையில் தவிப்போரை தாங்கிடவே,
நாம் சேர்வோம் !
துயரெதுவும் தொடராமல் வாழ்ந்திட,
நாம் வழிசெய்வோம் ‌!
துரோகத்தில் வீழ்ந்தோரை விழித்தெழவே,
நாம் முயல்வோம் !
அன்புக்கு ‌ஏங்குவோருக்கு அடைகளமாய்,
நாம் வாழ்வோம் !
அறம் செய்தே நம் வாழ்வை எப்பொழுதும்,
நாம் வெல்வோம் !

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :