கிறுக்கல்-55 | 03-02-2019

உயிருக்கு உயிராக உன்னை 
நினைத்தேன்,
உன் நினைவுகளை நெஞ்சோடு தான்
புதைத்தேன்.

உன்னை மறந்து வாழ்ந்திடத்தான் நான்
முயன்றேன்,
மறந்திட முடியாமல் நான் 
தவித்தேன்.

மைவிழியின் பார்வையில் நான்
வீழ்ந்தேன்,
கரையேற முடியாமல் நான்
தவித்தேன்.

சினம் கொண்ட வார்த்தைகளால் நான்
சிதைந்தேன்,
அதன் காயங்கள் ஆராமல் நான்
தவித்தேன்.

உன் நினைவில் எப்பொழுதும் நான்
வாழ்ந்தேன்,
நொடி‌பொழுதும் மறவாமல் நான்‌ 
தவித்தேன்.

கண்ணீரை காற்றோடு நான்
கறைத்தேன்,
காலங்கள் கடந்தபின்பும் காதலோடு நான்
காத்திருந்தேன்.

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment