கிறுக்கல்-31 | 10-01-2019

வலியோடு வாழ்பவன்,
பிறர் வலிக்கு வித்தாக மாட்டான்.
குறிக்கோளோடு வாழ்பவன்,
குறுக்குப்பாதையில் பயணிக்க மாட்டான் !
அடக்கத்தோடு வாழ்பவன்,
ஆணவம் புரிய மாட்டான்.
அரவனைத்து வாழ்பவன்,
பரிதவிக்க விட மாட்டான்.
அன்போடு வாழ்பவன்,
அதிகாரம் செய்ய மாட்டான் !!

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment