கிறுக்கல்-52 | 26-01-2019


நெடுநேரம் உறங்காமல்,
உன் நினைவில் நான் மிதந்தேன்.
மிதக்கும் காற்றில்,
உன் சுவாசத்தை நான் உணர்ந்தேன்.
விடியும் முன்னரே ,
உன்னை பார்க்க நான் தவித்தேன்.
உன் முகம் பார்த்தால்,
பசி மறந்து தான் கிடப்பேன்.
நீ பேசும் வார்த்தைகள்,
நெஞ்சோடு தான் புதைத்தேன்.
உன் கைவிரல் கோர்த்து,
நடைபோட தான் துடித்தேன்.
உன் மடியில் தலைசாய்த்து,
முடிகோத என்னை மறப்பேன்.
நீ என்னை அனைத்திடவே,
இதயத்தின் வலி இழப்பேன்.
உன்னுடன் வாழ்ந்திடவே,
இப்பிறவி நான் எடுத்தேன் !!!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment