கிறுக்கல்-48 | 21-01-2019

தெருக்களில் தான் அலைந்து,
தெரியாமல் தான் திருடி,
மரத்தடியில் தான் அமர்ந்து,
அசைபோட்ட அக்காலம்.

மதில்மேல் தான் அமர்ந்து,
மணிகனக்கில் தான் பேசி,
சிரிப்புடனே தான் மகிழ்ந்து,
செலவிட்ட அக்காலம்.

தண்ணீரில் நிதம் நனைந்து,
கண் சிவந்து தான் போக,
தந்தைக்கு தான் பயந்து,
அலறிய அக்காலம்.

வயல்களில் தான் திரிந்து,
உணவுக்கு கரும்பருந்தி,
வரப்பின் மேல் உறங்கி,
வளம்வந்த  அக்காலம்.

விடியலுக்கு முன்னரே,
விளையாட தான் சென்று,
பசி வந்த பின்னாலும்,
அடங்காத அக்காலம்.

கண்மூடி நான் நினைத்தால்,
நொடி பொழுதும் மறவாமல்,
நினைவலையால் நிரம்பிடம், 
நான் வாழ்ந்த அக்காலம்.
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :