எங்கே செல்கிறது எம் நாடு ?😟

உழைப்பவனுக்கு உயர்வுயில்லை !
உழுபவனுக்கு உரிமையில்லை !
படித்தவனுக்கு வேலையில்லை !
பெண்களுக்கு பாதுகாப்பில்லை !
நிலத்தடியில் நீர்யில்லை !
சுத்தமான காற்றில்லை !
சுகாதாரமான வாழ்வில்லை !
போராட்டமே நம் வாழ்வில்லை !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

முயற்சியை முதலாக்கி !
உழைப்பை உரமாக்கி !
நம்பிக்கையை விதையாக்கி!
அறிவை நீராக்கி !
வஞ்சங்களை களைநீக்கி !
அன்பை ! அறுவடை செய்வதே,
வாழ்க்கை 👆

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment

தவறுகளை தட்டிக்கேட்டு,
"பழகிக்கொள்"
தேவையற்ற விமர்சனங்களை,
"தவிர்த்துக்கொள்"
சுயநல போக்கை சற்றே
"விலகிக்கொள்"
தன்மானம் தளராமல்,
"பார்த்துக்கொள்"
தன்னம்பிக்கையை நாள்தோறும், வளர்த்துக்கொள் !
ஞாபகங்களை சிதறாமல்,
"சேர்த்துக்கொள்"
வாழ்க்கையை பிறருக்கு பயனுள்ளதாக
"மாற்றிக்கொள்"

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

நேர்மையும்,உண்மையும்
உடமையாய் கொண்டவன் ,
கடவுளையோ அல்ல காவியையோ ?
பிறர் கால்களையோ தழுவும் அவசியமில்லை !!!

தோல்வியே வரினும்,
நெஞ்சை நிமிர்த்து நில் !
நேர்மை நம்மை ஒருநாளும்
கைவிடாது !!

இயற்கையே கடவுள் !
உண்மையே தெய்வம் !!
நேர்மையே நம் வழிபாடு !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

இதய துடிப்பை இருக்கி பிடித்தவளே !
இமைகள் அசையா அதிசயமே !
உன் நிழல் பார்த்தே நான்
காதலுற்றேன் !

உயிர் ஊட்டிய ஒவியமே ,
என் மூச்சு காற்றின் முகவரியே !
உன் இதழ் அசைவில் சற்றே இடறி
போனேன் !

கவி பாடும் காவியமே,
கண்கள் இமைக்கும் அதிசய ஓவியமே,
உன் ஆர்பரிக்கும் அழகுக்கு
அடிமையானேன் !

காவிய பேரழகே,
காத்திருக்கிறேன் உன் காதலுக்காக,
பச்சை கொடியசைத்து நம் பயணத்தை தொடங்குவாயா ?


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

வாழ்வில் உயர்வது பெரியதல்ல ?
உயர்த்தியரை மறவாமல் இருப்பதே,
பெரிது !
வெற்றிகளை குவிப்பது பெரியதல்ல ?
பிறர் மனம் நோகா வெற்றியே,
பெரிது !
தோல்விகளை சுமப்பது பெரியதல்ல ?
தோல்விகளில் கற்கும் பாடமே,
பெரிது !
நேர்மையை பேசுவது பெரியதல்ல ?
நேர்மையாக வாழ்வதே,
பெரிது !
அன்பை பெறுவது பெரியதல்ல ?
பெற்ற அன்புக்கு உண்மையாக இருப்பதே,
பெரிது !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

தழுதழுத்த குரலும்,
தள்ளாடும் நடையும் !
வலுவிழந்த கரமும்,
மனம்முறிந்த நெஞ்சும்!
பசித்திருக்கும் வயிறும்,
பகையில்லா பண்பும் !
அளவில்லா அன்பும்,
அடிப்பணியா மனமும் !
உண்மையில்லா உறவும்,
உறுதியற்ற உயிரும் !
உடையவர்கள் யாசகர்கள் ஆகின்,
என்போல் சிலருக்கோ அவர்கள்
நிகரில்லா நேசகர்கள் !


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment

நான் ?

அன்பென்னும் கடவுளை தினம்தோறும்,
தொழுபவன் நான் !!
ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் !!
ஆதிக்க அரசியலை அடியோடு,
வெறுப்பவன் நான் !!
மனிதருள் வேற்றுமை போற்றாமல்,
வாழ்பவன் நான் !!
வெற்றி தோல்விகளை சமமென,
கருதுபவன் நான் !!
உழைத்து வாழ்வதே உயர்வென,
நினைப்பவன் நான் !!
வாழ்வில் எதுவும் நிரந்திரமில்லை,
என்பதை உணர்ந்தவன் நான் !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment

விழித்திருப்பது விடியலுக்காக அல்ல?
வெற்றிக்காக !
காத்திருப்பது கட்டளைக்காக அல்ல?
கடமைக்காக !
உழைப்பது வெற்றிக்காக அல்ல?
உண்மைக்காக !
போராடுவது ஆடம்பரத்துக்காக அல்ல?
அடிப்படைக்காக !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 4 comments |

4 comments :

Post a Comment

ஓடி ஒளிவது வாழ்க்கையில்லை,
தேடி தீர்ப்பது தான் வாழ்க்கை !
அஞ்சி அஞ்சி வாழ்வது
வாழ்க்கையில்லை,
அச்சத்தை துறப்பது தான் வாழ்க்கை !
சோகங்களை சுமப்பது
வாழ்க்கையில்லை,
சோகங்களை கடப்பது தான் வாழ்க்கை !
தோல்வியில் துவள்வது வாழ்க்கையில்லை,
முயற்சியோடு முயல்வது தான் வாழ்க்கை !
வெற்றியில் திளைப்பது வாழ்க்கையில்லை,
பிறர் வெற்றிக்கு வித்தாவது தான் வாழ்க்கை !
வாழ்வதோ ஒருமுறை ! வாழ்வோம் !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 6 comments |

6 comments :

Post a Comment

யார் மனிதன் ?
தனக்கெனவே வாழாமல் ,
பிறருக்காகவும் வாழ்பவனே, மனிதன் !
தன் பசி போக்கியதும் ,
பிறர் பசியை என்னுபவனே, மனிதன் !
தள்ளாடும் மனிதர்களை,
கரம் கொண்டு தாங்குபவனே, மனிதன் !
கடமையை மீறாமல்,
கண்ணியமாக வாழ்பவனே,மனிதன்!
பிறர் உழைப்பில் வாழாமல்,
தன் உழைப்பில் வாழ்பவனே , மனிதன் !
வஞ்சங்கள் சுமக்காமல்,
அன்பில் வாழ்பவனே ,மனிதன் !
பிறர் உணர்வுகளுக்கு,
மதிப்பளித்து வாழ்பவனே, மனிதன் !
வாழ்வின் ஏற்ற தாழ்வுகள்,
சமமென உணர்ந்தவனே,மனிதன் !
மனிதனாக வாழ முயற்சிப்போம்,
மனிதநேயம் காப்போம் !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

வலி என்ற பொழுதெல்லாம்,
ஆறுதல் நீயன்றோ !
அன்பால் என்னை ஆளும்,
ஆற்றலும் நீயன்றோ !
என் துயர் போக்க தோன்றிய,
தேவதை நீயன்றோ !
என் மெளனத்தின் அர்த்தங்கள்,
உணர்ந்தவளும் நீயன்றோ !
என் புன்னகையின் புதைந்திருக்கும்,
காரணமும் நீயன்றோ !
தோல்வியில் தோள் சாயும்,
நட்பும் நீயன்றோ !
தாயும் நீயன்றோ , சேயும் நீயன்றோ !
நினைவில் நிறைந்திருக்கும்,
நீங்கா உறவும் நீயன்றோ !
என் மரணத்தின் வாசல் வரை,
வருபவளும் நீயன்றோ !
நீயின்றி நானில்லை !
உன் நட்பின்றி வேறில்லை !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தொட வேண்டும் என துணிந்தால்,
தொடுவானமும் ஓர் தூரமில்லை !
கடக்க வேண்டும் என துணிந்தால்,
பெருங்கடலும் ஓர் ஆழமில்லை !
சுமக்க வேண்டும் என துணிந்தால்,
இமயமும் ஓர் பாரமில்லை !
எதிர்க்க வேண்டும் என துணிந்தால்,
புயலும் ஓர் தடையில்லை !
வாழ்க்கையை பிடித்தாற் போல் வாழ,
எதுவுமே ஓர் தடையில்லை !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

உன்னை எண்ணி வாழ்ந்தெல்லாம் ,
நொடி பொழுதில் களைந்தது
ஏனோ ?
நீ உதிர்த்த வார்த்தைகள் நெஞ்சில் உரைந்து,
விடைப்பெற மறுப்பது
ஏனோ ?
நீயில்லா காலங்கள் தனிமையில்
கடந்திட மறுப்பது
ஏனோ ?
என் கண்ணீரின் பிறப்பிடமாய்,
உன் நினைவுகள் இருப்பது
ஏனோ ?
என் உயிரிலும் மேலான உன்னை,
மறப்பதிலும் இறத்தல்
எளிதோ ?!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment