கிறுக்கல்-80 | 21-04-2019

தழுதழுத்த குரலும்,
தள்ளாடும் நடையும் !
வலுவிழந்த கரமும்,
மனம்முறிந்த நெஞ்சும்!
பசித்திருக்கும் வயிறும்,
பகையில்லா பண்பும் !
அளவில்லா அன்பும்,
அடிப்பணியா மனமும் !
உண்மையில்லா உறவும்,
உறுதியற்ற உயிரும் !
உடையவர்கள் யாசகர்கள் ஆகின்,
என்போல் சிலருக்கோ அவர்கள்
நிகரில்லா நேசகர்கள் !மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 4 comments |

4 comments :