கிறுக்கல்-81 | 23-04-2019

வாழ்வில் உயர்வது பெரியதல்ல ?
உயர்த்தியரை மறவாமல் இருப்பதே,
பெரிது !
வெற்றிகளை குவிப்பது பெரியதல்ல ?
பிறர் மனம் நோகா வெற்றியே,
பெரிது !
தோல்விகளை சுமப்பது பெரியதல்ல ?
தோல்விகளில் கற்கும் பாடமே,
பெரிது !
நேர்மையை பேசுவது பெரியதல்ல ?
நேர்மையாக வாழ்வதே,
பெரிது !
அன்பை பெறுவது பெரியதல்ல ?
பெற்ற அன்புக்கு உண்மையாக இருப்பதே,
பெரிது !


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment