கிறுக்கல்-75 | 06-04-2019

வலி என்ற பொழுதெல்லாம்,
ஆறுதல் நீயன்றோ !
அன்பால் என்னை ஆளும்,
ஆற்றலும் நீயன்றோ !
என் துயர் போக்க தோன்றிய,
தேவதை நீயன்றோ !
என் மெளனத்தின் அர்த்தங்கள்,
உணர்ந்தவளும் நீயன்றோ !
என் புன்னகையின் புதைந்திருக்கும்,
காரணமும் நீயன்றோ !
தோல்வியில் தோள் சாயும்,
நட்பும் நீயன்றோ !
தாயும் நீயன்றோ , சேயும் நீயன்றோ !
நினைவில் நிறைந்திருக்கும்,
நீங்கா உறவும் நீயன்றோ !
என் மரணத்தின் வாசல் வரை,
வருபவளும் நீயன்றோ !
நீயின்றி நானில்லை !
உன் நட்பின்றி வேறில்லை !!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :