நிலவொளி நீயென்றால்,

கருவிழியாய் நான்மாறி,

என்னுள் உன்னை சிறைப்பிடிப்பேன் !


பனித்துளி நீயென்றால்,

சூரியனாய் நான்மாறி,

உன்னை நான் அடைவேன் !


மழைநீர்  நீயென்றால்,

கடலாக நான்மாறி,

என்னுள் உன்னை சேர்ப்பேன் !


காற்றாய் நீயானால்,

கலைஞனாய் நான்மாறி,

உன்னை நான் இசைப்பேன் !


இரவாக நீயானால்,

கனவாக நான்மாறி,

என்னுள் நான் நிறைவேன் !


தமிழாய் நீயானால்,

கவியாய் நான்மாறி,

காவிய கவி படைப்பேன்



Leave a Comment Read More
மறுநொடி மர்மங்கள்அவிழா ,
வியப்பூட்டும் வாழ்விது !
கதிரவனே காரிருளில் மூழ்க,
நாம் என்ன விதிவிலக்கா ?!
நம் துன்பங்கள் யாவும்
கணநொடியில் கரைந்து போகலாம்!
நம்பிக்கையோடு நகர்வோம் !


1 comment Read More
இறப்பை தவிர,  பிற யாவும் !
முயற்சித்தால் திரும்ப பெற கூடியதே !!


Leave a Comment Read More
எழுதப்பட்டவையே யாவும் !எதையிழந்தாலும் கவலையின்றி,
நடப்பவை நடக்கட்டும் என்பதே வாழ்க்கை !!


Leave a Comment Read More
அறிவென்னும் அகந்தை கொள்ளும்,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
                 "மறவாதீர்"
கர்வமென்னும் காரிருள் சூழ்ந்த,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
                " மறவாதீர்"
செல்வத்தில் செருக்கேறிய ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
                "மறவாதீர்"
புறம்பேசும் புலமைப்படைத்த ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
               "மறவாதீர்"
பொய்மையில் பொருளிட்டும் ‌,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!   
                "மறவாதீர்"
மண்ணோடு மண்ணாகி ,
புழுவிற்கு உறமாகும் மனிதர்களே  !!
   "மறவாதீர் மானிடும் போற்ற "


Leave a Comment Read More