சேர்த்தவை யாவும் நொடியில் சிதறிடும்!வாழ்விது,
பணத்தில் பின்னால் பித்தாக அலையும்! வாழ்விது,
ஆசைகள் எப்பொழும் அடங்கா!
வாழ்விது,
ஆணவத்தை கவசமென சுமந்திடம்!
வாழ்விது,
மறுகணமே மாறிடும் நிலையில்லா‌! வாழ்விது,
மரணத்தை நோக்கி நடைபோடும்! அர்ப
வாழ்விது,
இவ்வாழ்க்கை வாழ்ந்திடவோ யான் பிறந்தேன் ?


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment

விடுமுறை நாட்களிலும்,
விடாமல் தான் உழைப்பார்.
பம்பரம் போல் சுழன்று,
கடமைகளை தான் முடிப்பார்.

கஷ்டங்கள் வந்தாலும்,
தன் தோள்மீது தான் சுமப்பார்.
துயரங்கள் தொடர்ந்தாலும்,
தளராமல் தான் இருப்பார்.

புத்தாடைகள் தான் அளித்து,
மகிழ்ச்சியில் மூழ்கடிப்பார்.
நாம் செய்யும் குறும்புகளை,
தொலைவிலிருந்தே தான் இரசிப்பார்‌.

பச்சிளம் குழந்தைப்போல் ,
எப்பொழுதும் தான் சிரிப்பார்.
தவறு ஏதும் செய்துவிட்டால்,
தவறாமல் தான் கண்டிப்பார்.

சிறுதுளி கண்ணீரையும்,
வராமல் தான் தடுப்பார்.
உயிர் போகும் நிலையிலையும்,
நம் குரல் கேட்கத்தான் துடிப்பார். 


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment


நெடுநேரம் உறங்காமல்,
உன் நினைவில் நான் மிதந்தேன்.
மிதக்கும் காற்றில்,
உன் சுவாசத்தை நான் உணர்ந்தேன்.
விடியும் முன்னரே ,
உன்னை பார்க்க நான் தவித்தேன்.
உன் முகம் பார்த்தால்,
பசி மறந்து தான் கிடப்பேன்.
நீ பேசும் வார்த்தைகள்,
நெஞ்சோடு தான் புதைத்தேன்.
உன் கைவிரல் கோர்த்து,
நடைபோட தான் துடித்தேன்.
உன் மடியில் தலைசாய்த்து,
முடிகோத என்னை மறப்பேன்.
நீ என்னை அனைத்திடவே,
இதயத்தின் வலி இழப்பேன்.
உன்னுடன் வாழ்ந்திடவே,
இப்பிறவி நான் எடுத்தேன் !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment



உதிர்க்கும் வார்த்தைகள்
ஒவ்வொன்றிலும்,உண்மை வேண்டும்.
செய்யும் செயல்கள் அனைத்திலும்,
நேர்மை வேண்டும்.
உலகத்தை பார்க்கும் பார்வையில்,
தெளிவு வேண்டும்.
இதயத்தின் ஓரத்தில் எப்பொழுதும் ,
ஈரம்‌ வேண்டும்.
முயற்சியை கைவிடாமல் எந்நாளும்,
வாழ்ந்திடல் வேண்டும்.
உழைத்தே எப்பொழுதும்,
உயர்தல் வேண்டும்.

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment


கருவாக நீயிருந்த காலத்தில்,
கற்பனையில் நான் மிதந்து,
உன் உருவம் தனை வரைந்து,
உன் நினைவோடு தான் வாழ்ந்தேன்.

முதல் அழுகை தனை கேட்டு,
துடித்தெழுந்து உனை பார்க்க,
விரைந்தோடி தான் வந்தேன். 

மெல்லிய விரல் தொட்டு,
மெது மெதுவாய் உன்னை தூக்கி,
நெஞ்சோடு தான் அனைத்து,
நெடு நேரம் உன்னை இரசித்தேன்.

உன் மூச்சி என்னை மோத,
உன் சிரிப்பில் தான் மூழ்கி,
விளங்கா முடியா  காதலில்,
மெய் மறந்து தான் நின்றேன்.

உனது அருகில் நான் அமர்ந்து,
நீ உறங்க நான் இரசித்தேன்.
தூக்கத்தில் நீ அழுதால்,
துடித்திடவே நான் எழுவேன்.

உன் மழலை பேச்சினிலே,
நான் மூழ்கி மீளாமல் ,
என்னை‌ மறந்து உன்னை இரசித்தேன்..

நீ என்னை அனைத்திடவே ,
நிகழ்காலம் தனை மறந்து,
நிலவில் மிதப்பது போல்,
நான் உணர்ந்தேன்.

உனக்காக நான் வாழ்ந்து,
என் ஆயுள் முழுவதையும்,
உனக்கெனவே நான் தந்து,
நீ வாழ நான் மகிழ்வேன் :)



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment

வலியென்று நான் அழுதால் துடித்திட நீ!
வேண்டாம், துடைத்தாலே போதும்.
மெளனத்தில் நான் இருந்தால் பேசிட நீ!
வேண்டாம்,புன்னகையே போதும்.
தனிமையில் நான் நடந்தால் துணையாக நீ!
வேண்டாம், நினைவலையே போதும்.
துயரத்தில் நான் இருந்தால் மடிசாய நீ!
வேண்டாம், சிறு ஆருதலே போதும். 
உயிர் கொடுக்கும் உறவாக நீ! 
வேண்டாம், உண்மையான உறவே போதும்.


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தெருக்களில் தான் அலைந்து,
தெரியாமல் தான் திருடி,
மரத்தடியில் தான் அமர்ந்து,
அசைபோட்ட அக்காலம்.

மதில்மேல் தான் அமர்ந்து,
மணிகனக்கில் தான் பேசி,
சிரிப்புடனே தான் மகிழ்ந்து,
செலவிட்ட அக்காலம்.

தண்ணீரில் நிதம் நனைந்து,
கண் சிவந்து தான் போக,
தந்தைக்கு தான் பயந்து,
அலறிய அக்காலம்.

வயல்களில் தான் திரிந்து,
உணவுக்கு கரும்பருந்தி,
வரப்பின் மேல் உறங்கி,
வளம்வந்த  அக்காலம்.

விடியலுக்கு முன்னரே,
விளையாட தான் சென்று,
பசி வந்த பின்னாலும்,
அடங்காத அக்காலம்.

கண்மூடி நான் நினைத்தால்,
நொடி பொழுதும் மறவாமல்,
நினைவலையால் நிரம்பிடம், 
நான் வாழ்ந்த அக்காலம்.



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

கண்ணீரோடு தான் சென்றேன்,
முகம் தெரியா தேசத்திற்கு,
அனைத்திடவோ தாயில்லை,
மடிசாய மனைவியுமில்லை,

பசியென்று நான் அழுதால்,
கேட்டிடவோ யாருமில்லை,
கண்ணீரில் நான் நனையா,
நாளென்று ஏதுமில்லை.

உறவுகளைதான் பிரிந்து,
அடையாளங்கள் தனை மறந்து,
அவமானங்கள் தான் சுமந்து,
வாழ்கின்றேன் ! வேறு வழியில்லை !!!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

நிலவின் ஒளி இவளோ ?
செங்காந்தள் நிறம் இவளோ ?
கடலின் அலை இவளோ ?

விழியின் இமை இவளோ ?
இதழின் சிரிப்பு இவளோ ?
இதய‌ துடிப்பு இவளோ ?

மயிலின் இறகு இவளோ ?
குயிலின் குரல் இவளோ ?
மானின் நடை இவளோ ?

கோவில் சிலை இவளோ ?
மழலை மொழி இவளோ ?
தேனின் சுவை இவளோ ?
தேவதையின் அழகு இவளோ ?


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment

உன் உருவத்தின் நிழலானேன்,
உன்னை பார்த்து தான் வளர்ந்தேன்,
தூரத்தில் என்னை பார்த்தால்,
அனைத்திடவே நீ அழைப்பாய்,
உன் தோள்களிள் நான் ஏற,
ஆசையுடன் தான் நடப்பாய்,
எனது ஆசைதனை நீயறிந்து,
கேட்காமல் தான் தருவாய்,
உன்னை அனைத்து நான் உறங்க,
உறங்காமல் தான் இரசிப்பாய்,
துயரெனவே நான் வந்தால்,
துடைத்தெறிய நீ இருப்பாய்,
ஒருபடி நான் உயர்ந்தால்,
உளமாற நீ மகிழ்வாய்,
உயிருக்கு உயிராக ,
என்னை நினைத்து நீ வளர்த்தாய்,
உயிர் ஊட்டிய என் இறைவா ,
உன்னை மறவேன் எந்நாளும்..
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 6 comments |

6 comments :

Post a Comment

எது மனிதம் ?

கடவுளை மதிப்பதிற்கு முன்,
சக மனிதனை மதிக்கும் மாண்பு  !
அடையாளமில்லா மனிதர்களிடமும்,
அன்புடன் பழகும் உள்ளம்  !!
பிறர் துன்பத்தை கண்டு,
தம் மனம் துன்பத்தில் வாடுதல்!!!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

காற்றோடு காற்றாக தான் கரைந்து !
கிளைகள் ஒன்றோடு ஒன்று உரசி,
மீட்டும் ரீங்கார‌ ஓசையில் தான் மயங்கி!!
மரத்தடியில் தான் அமர்ந்து,
இயற்கையின் எழில்தனில் என்னை தொலைத்து !!!
பாய்ந்தோடும் அருவியில் கவலைகள் தனை மறந்து,
நீரோட்டம் தனில் நனைந்து !
சுள்ளிகள் தனை சேர்த்து,
மூட்டிய நெருப்பதனில் குளிர் காய்ந்து !!
இருட்டின் நடுவே விழும்,
நிலவொளியில் தான் நனைந்து !!!
சூழ்ச்சிகள் மிகுந்த மனிதர்கள்தனை தான் மறந்து,
வாழ்ந்திடவே ஆசை கொண்டேன் :) 
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

நான் என்பதை தவிர்த்து,
நாம் என்பதை சேர்தல் நன்று.
எனது என்பதை தவிர்த்து
நமது என்பதை சேர்தல் நன்று.

தனித்து வாழ்வதை தவிர்த்து,
கூடி வாழ்தல் மிக நன்று.
ஏமாற்றி வாழ்வதை தவிர்த்து,
ஏமாற்றாமல் வாழ்தல் நன்று.

பகைத்து வாழ்வதை தவிர்த்து,
நட்போடு வாழ்தல் நன்று.
கவலையோடு வாழ்வதை தவிர்த்து,
கவலைகள் மறந்து வாழ்தல் நன்று.

கர்வம் கொள்வதை தவிர்த்து,
தன்னடக்கதோடு வாழ்தல் நன்று.
சினம் கொள்வதை தவிர்த்து,
அமைதியோடு வாழ்தல் நன்று.

பணத்திற்காக வாழ்வதை தவிர்த்து,
பாசத்திற்காக வாழ்தல் நன்று.
சேர்த்து வாழ்வதை தவிர்த்து,
கொடுத்து வாழ்வதே நன்று.

வாழ்வோம் ! வாழ விடுவோம் !!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

மெல்லிய அடி வைத்து,
மெது மெதுவாய் தான் நடந்து.
உயிர் போகும் வலி பொறுத்து,
உயிர் தந்த என் தாயே.

உன் சூட்டின் கதகதப்பில்,
நான் உறங்க நீ இரசித்தாய்.
உன் மார்பில் முகம் பதித்து,
நான் அழவே நீ துடித்தாய்.

உன் தோள்களின் என்னை சுமந்து,
நீ கடந்த காலங்கள்,
நெஞ்சோடு தான் பதிந்து,
மறவாதே நொடி பொழுதும்.

நான் செய்யும் தவறனைத்தும்,
ஒரு நொடியில் தான் மறந்து,
மறுகணமே என் முடி கோதி,
சிரிப்புடனே நீ மன்னித்தாய்.

உன் ஆசைதனை மறந்து,
எனக்கெனவே நீ வாழ்ந்தாய்,
தனி ஒரு ஆளாக நீயிருந்து,
என்னை வளர்த்த என் தாயே.

இனிவரும் காலங்கள்,
உனக்கெனவே நான் வாழ்ந்து,
உனதாசை அத்தனையும்,
நிறைவேற்ற தான் முயுல்வேன்.


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

முன்பொரு காலத்தில் அச்சத்தின் அறுகுறியாம் !
முந்நூறு தசைகள் ஒன்றாகும் சங்ககமாம் !!
இரத்த நாளங்களை சீராக்கும்  வைத்தியராம் !!!
அழுத்தங்களும், கவலைகளும் வெளியேற்றும் தொழிலகமாம் !
மனதை உறுதியாக்கும் நல்லதொரு பயிலகமாம் !!
குழந்தைகளிடம் கற்க வேண்டிய தாரக மந்திரமாம் !!!
புன்முறுவல் செய்யவே பிறந்தோமே மன் மேலே !
கவலைகள் தனைமறந்து புரிவோமே புன்னகையை !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment


இதழ்களில் தோன்றும் குறுநகை நீதானோ,
செவியில் கேட்கும் ரீங்காரம் நீதானோ,
விழிகளில் தெரியும் விடியல் நீதானோ,
கனவில் தோன்றும் காட்சிகள் நீதானோ,
இமைகாமல் பார்க்கும் அதிசயம் நீதானோ,
இதயத்தின் ஓசை காதல் நீதானோ,
உடலில் பாயும் செங்குருதி நீதானோ,
உயிர் அணுக்களின் குவியல் நீதானோ,
விரல்கள் மீட்டும் வீணை நீதானோ,
சிந்தனையில் செதுக்கிய சிற்பம் நீதானோ,
உடலில் சுரக்கும் ஹார்மோன் நீதானோ,
வெற்றியில் இரகசியம் நீதானோ !
அன்பே‌ நீதானோ !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

எது வேண்டும்?
தோல்வியில் நம்பிக்கை,
வெற்றியில் பணிவு,
உழைப்பில் நேர்மை,
காதலில் கண்ணியம்,
பார்வையில் பரிவு,
கோவத்தில் அமைதி,
புகழில் தன்னடக்கம்,
குழப்பத்தில் தெளிவு,
செயல்களில் ஒழுக்கம்.

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment


நான் கொண்ட காதலை காற்றில் கரைத்துவிட்டு,
உன் காதல் எதுவென கேட்டறிந்தேன்...
நான் பெற்ற வலி யாவும் மறைத்து கொண்டு,
உன் புன்னகையே போதும் என்றிருந்தேன்.
நான் கண்ட கனவு அனைத்தும் புதைத்துவிட்டு,
உன் கனவை நிறைவேற்ற காத்திருந்தேன்.
உன்னை மறந்து நான் வாழ
மெது மெதுவாய் பழகுகிறேன் கண்மணியே !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

நீயில்லா நிமிடங்கள் கடந்திடவே,
முயற்சித்தேன் முடியவில்லை.
நான் அடையும் துயர் யாவும்,
துடைத்தெறிய நீயில்லை.
உனையின்றி எனக்கென்று தனி ஒரு வாழ்வில்லை,
உன் நினைவோடு வாழ்கிறேன் இப்பொழுதும் மாறவில்லை !!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

நல்லவர்களை நாடி பிடித்து பார்ப்பதும்,
கெட்டவர்களை கண்மூடித்தனமாக நம்புவதும்,
உண்மையை எடுத்துரைத்தால் ஏளனமாகவும்,
பொய்மையின் பின்னால் படையெடுப்பதும்,
நேர்மையை கடைப்பிடித்தால் கோமாளியென்றும்,
குறுக்கு வழியில் பயனிப்பதே புத்திசாலித்தனம் எனவும்,
பணிவோடு பேசினால் பகல்வேசம் எனவும்,
திமிர் கொண்டு பேசுவதே பெருமையனவும்,
பணத்தாசையில்லை என்றால் பாசாங்குயென்றும்,
பணம் மட்டுமே வாழ்க்கையெனவும்
வாழும் மக்கள் மாறும் வரை மாற்றம் ஏதும் நிகழாது...

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment


பலரோ கால் வயிற்று உணவுக்கு
கால் கடுக்க நடமாட
சிலரோ கால்மேல் கால்போட்டு,
காத்திருக்கும் உணவை கால் பாதி வீண் செய்து, விட்டெரியும் விந்தையினை யான் என் செய்வேன் ?
பலரோ உடுத்த உடையின்றி உறைபனியில்
அள்ளாட, சிலரோ பழையன கழிதல் வேண்டும் என சுட்டெரிக்கும் சிந்தனையை யான் என் செய்வேன் ?
பலரோ இருப்பதிற்கு இடமின்றி அலைபாய,
சிலரோ கடலோரத்தில் காற்று வாங்க வீடு என்றிருப்பதை யான் என் செய்வேன் ?
அடிப்படை‌யிழந்த மக்களுக்கு நடுவில்,
ஆடம்பரங்களை தவிர்க்க முற்படுவோம் !
மனிதம் காப்போம் !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

உன் சிரிப்பில் என் சிந்தனைகள் சிதற கண்டேன்,
நீ பேசும் வார்த்தைகள் அனைத்தும் வேதம் என்பேன்,
உன் இதழ் அசைவில் மதி மயங்கி நின்றேன்,
உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி போனேன்,
உன் ஒரு நிமிட பார்வைக்கு இதயம் ஏங்கி நின்றேன்,
நீ என்னை கடந்து போகையில் பலவித உணர்வுகள் கொண்டேன்,
உன்னுடன் வாழத்தானே இப்பிறவி கொண்டேன்...
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

நல்லவர்கள் போல் நடிப்பது மிக எளிது,
நல்லவர்களாய் வாழ்வது மிக கடிது.
பிறரை கெடுத்து வாழ்வது மிக எளிது,
பிறர் வாழ நாம் வாழ்தல் மிக கடிது.
பிறர் உழைப்பில் நம் வெற்றி மிக எளிது,
பிறர் வெற்றிக்கு நாம் உழைப்பது மிக கடிது
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

வலியோடு வாழ்பவன்,
பிறர் வலிக்கு வித்தாக மாட்டான்.
குறிக்கோளோடு வாழ்பவன்,
குறுக்குப்பாதையில் பயணிக்க மாட்டான் !
அடக்கத்தோடு வாழ்பவன்,
ஆணவம் புரிய மாட்டான்.
அரவனைத்து வாழ்பவன்,
பரிதவிக்க விட மாட்டான்.
அன்போடு வாழ்பவன்,
அதிகாரம் செய்ய மாட்டான் !!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

கருவிழியின் காந்தத்தில்,
என் காட்சிகள் ஒட்ட கண்டேன் !
மெல்லிய இமைகளில்,
என் மெய் மறந்து நின்றேன் !!
இதழ்களின் அசைவில்,
என் இதய துடிப்பறிந்தேன் !!!
கைகளின் அசைவில்,
காட்சிகள் வரைய கண்டேன் !
உன் அன்பின் அறவணைப்பில்,
ஆயுள் நீள கண்டேன் !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

யார் வெற்றியாளன் ?
கடவுளுக்கு அஞ்சுபவனைவிட,
மனசாட்சிக்கு அஞ்சுபவனே !
தோல்விக்கு அஞ்சுபவனைவிட,
தோல்வியை கண்டு அஞ்சாதவனே !
தடைகளுக்கு அஞ்சுபவனைவிட,
தடைகளை தகர்பவனே !
நம்பிக்கை இழந்தவனைவிட
நம்பிக்கையோடு வாழ்பவனே!
முயற்சி அற்றவனைவிட,
முயற்சிப்பவனே !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

பிறர் துன்பத்தில் இன்பம் காணாமல்,
துன்பத்தை துடைக்கும் கருவியாவோம் !
வலுவிழந்த கரங்களுக்கு,
வலுசேர்க்கும் தோள்களாக நாமிருப்போம் !!
நம்பிக்கை இழந்த உள்ளத்திற்கு,
நம்பிக்கையாக நாமிருப்போம் !!!
வாழ்வோம் ! பிறரையும் வாழ வழி செய்வோம்  !!



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

உழைப்பதற்கு துனிந்தவன் ஏமாற்ற மாட்டான்,
ஏமாற்றுபவன் உழைக்க மாட்டான் !
நேர்மையில் ஊரியவன் அஞ்ச மாட்டான்,
அஞ்சுபவன் நேர்மையாக இருக்க மாட்டான் !!
கற்க்கும் எண்ணம் கொண்டவன் எறும்பிடமும் கற்ப்பான்,
தனக்கே அனைத்தும் தெரியும் என்பவன் கனவிலும் கற்க மாட்டான் !!!
தன்னை அறிந்தவன் ஆனவம் புரிய மாட்டான்,
ஆனவம் கொண்டவன் தன்னிலை அறிய  மாட்டான் !!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment


பிரச்சினையை தூண்டுபவனிடம் ‌,விலகுதல் நன்று !
தன்னை போல் பிறரையும் எண்ணுவோரிடம், சேர்தல் நன்று !!
ஏழ்மையிலும் சிறிப்பவரிடம், கற்றல் நன்று !!!
பெற்றவர்களிடமும், சான்றோர்களிடமும் பனிதல் நன்று !!!
பிறர் வாழ வழி வகுத்து , நாம் வாழ்தல் மிக நன்று !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

நம் ஆடம்பர தேவைகளை முடிந்தவரை
குறைந்துக்கொண்டு !
அடிப்படைத் தேவைகளுக்கு அள்ளாடும்
மக்களுக்கு உதவிட முயற்சிபோம் !!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

குறைகள் நிறைந்த வாழ்க்கையில்,
நிறைகளை தேடுபவனே,
நிம்மதியோடு வாழ்கிறான் !!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

முதலில் கடினமாக தோன்றும் எதுவும்,
இறுதிவரை கடினமாகவே இருப்பதில்லை !
நம்பிக்கையோடு முயற்சித்தால்,
வெற்றி நிச்சயம் !!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

ஆள்பவரோ ! அதிகாரம்யற்றவரோ !!
மரியாதை என்பது மனிதர்களுக்கு
ஏற்றவாறு மாறாமல் !
சமமாக அளித்திட வேண்டும் !!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

பிறரை ஏமாற்றி அடையும்  வெற்றியை
விட தோல்வியே சிறந்தது !!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து  !
செவி சாய்த்து !! ஆறுதல் அளிப்பவனே !!!
உண்மையில் மனிதன் ஆவான் !!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment

தவறுகளை பெரியதாக்காமல் !
திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்கும் !!
மனதே சிறந்தது !!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment


பழகுவதில் எளிமையும் !
செயல்களில் நேர்மையும் இருந்தால் !!
கடவுளே வந்தாலும்,
கர்வத்தோடு நிற்கலாம் !!!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

என்றுமே நேர்வழியை தேர்வுச்செய் !
பயணிப்பதற்கு சற்றே கடினமாக இருந்தாலும் !!
வெற்றியின் சுவை அதிகம் !!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

தர்மத்திற்கு எதிராக சுயநலத்தின் உச்சமாய் !
மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் அநீதியை !!
சக மனிதர்களாகிய நாம்
கைகோர்த்து !
அநீதியை எதிர்த்து "எழுச்சி" பெற வேண்டும் !!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

மற்றவர்களின் பலவீனத்தை பெரியதாக்காமல் !
அவர்களின் பலத்தை
போற்றுதல் வேண்டும் !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

விரல்கள் மெல்லத்தொட்டு,
நெற்றியில் முத்தமிட்டு,
இதயம் தன்னைத்தொட்டு‌,
உன்னை கண்ட அந்த நொடி,
மரணம் என்னைத்தொட்டு,
மண்மீது வீழ்ந்தாலும்,
மறவாது என் நினைவை விட்டு !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment


கோவம் !
பொறாமை !!
வஞ்சகம்யற்ற  !!
மனதே  "கடவுள்" !!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தேடும் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை,
அமைந்த வாழ்க்கையை சிலர் வாழ்வதில்லை !
வாழ்வில் இன்பமும் ! துன்பமும் அடையாதவர்கள் யாரும்யில்லை !!
புன்னகையும் நிரந்திரமில்லை ! கண்ணீரும் இறுதியில்லை !!
அன்பை தவிர இவ்வுலகில் வேறேதும் உண்மையில்லை !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment

உன்னோடு இருக்கைகில் உலகம் பிடிக்குதடி,
உன்  அருகில் நான் இருந்தால் உலகமே மறக்குதடி,
நீ பேசும் வார்த்தைகள் இதயத்தில் இனிக்குதடி,
உன் விழியில் தான்  என் விடியல் தெரியுதடி,
உன்  கைவிரல் பிடிக்கையில் பலவித உணர்வுகள் பிறக்குதடி,
என் இதயம் உன் நினைவால்தான்  துடிக்குதடி !!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

யாரையும் புண்படுத்தாத வெற்றியே !
உண்மையில் "வெற்றி"!!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

வெற்றியை நோக்கி பயணிப்பதைவிட !
அன்பை நோக்கி பயணிப்பதே சிறந்தது !!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

உன் மார்போடு என் முகம் பதித்து,
என் மரணம் வரை வாழ்வேன் பெண்ணே !
உன் தோளோடு என் தோள்கள் சேர்ந்து
இவ்வுலகை கடப்பேன் கண்ணே !!

உன் கால்விரல் பிடித்து என் காலங்கள்
கழிப்பேன் கண்ணே !
நீ ஒரு முறை சிரிக்க நான் பலமுறை
சிரிப்பேன் கண்ணே !!!

உன் மையிட்ட கண்களால் என் மதி
மயங்குதடி பெண்ணே !
உன் பார்வைக்காக என் உயிர்
கொடுப்பேன் கண்ணே !!

உன் கழுத்தில் மாலையிட என்
மனம் துடிக்குதடி பெண்ணே !
உன் கண்களில் கண்ணீர் கண்டால்
என் உயிர் துறப்பேன் கண்ணே !!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

புவி தட்டின் சிறு நகர்தல் போதும்,
நாம் நிரந்தரம் என நினைக்கும் அனைத்தும்
மண்ணுக்குள் போக !
வாழும்வரை வீண் கோவம், கர்வம், பொறாமையின்றி,
மனிதனாக வாழ முயற்சிப்போம்  !!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

ஆதாயம் தரும் நட்பை வளர்ப்பதைவிட,
அன்பை தரும் நட்பை வளர்ப்பதே சிறந்தது !!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

மனிதனை ! மனிதனாக !!
பார்க்கும் பார்வையே சிறந்தது !!!
இவ்வுலகில், யாருக்கும் யாரும் 
பெறியவருமில்லை;சிறியவருமில்லை !!!
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment