கிறுக்கல்-37 | 12-01-2019


நான் கொண்ட காதலை காற்றில் கரைத்துவிட்டு,
உன் காதல் எதுவென கேட்டறிந்தேன்...
நான் பெற்ற வலி யாவும் மறைத்து கொண்டு,
உன் புன்னகையே போதும் என்றிருந்தேன்.
நான் கண்ட கனவு அனைத்தும் புதைத்துவிட்டு,
உன் கனவை நிறைவேற்ற காத்திருந்தேன்.
உன்னை மறந்து நான் வாழ
மெது மெதுவாய் பழகுகிறேன் கண்மணியே !!!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :