கிறுக்கல்-35 | 12-01-2019

நல்லவர்களை நாடி பிடித்து பார்ப்பதும்,
கெட்டவர்களை கண்மூடித்தனமாக நம்புவதும்,
உண்மையை எடுத்துரைத்தால் ஏளனமாகவும்,
பொய்மையின் பின்னால் படையெடுப்பதும்,
நேர்மையை கடைப்பிடித்தால் கோமாளியென்றும்,
குறுக்கு வழியில் பயனிப்பதே புத்திசாலித்தனம் எனவும்,
பணிவோடு பேசினால் பகல்வேசம் எனவும்,
திமிர் கொண்டு பேசுவதே பெருமையனவும்,
பணத்தாசையில்லை என்றால் பாசாங்குயென்றும்,
பணம் மட்டுமே வாழ்க்கையெனவும்
வாழும் மக்கள் மாறும் வரை மாற்றம் ஏதும் நிகழாது...


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment