கிறுக்கல்-41 | 14-01-2019

மெல்லிய அடி வைத்து,
மெது மெதுவாய் தான் நடந்து.
உயிர் போகும் வலி பொறுத்து,
உயிர் தந்த என் தாயே.

உன் சூட்டின் கதகதப்பில்,
நான் உறங்க நீ இரசித்தாய்.
உன் மார்பில் முகம் பதித்து,
நான் அழவே நீ துடித்தாய்.

உன் தோள்களின் என்னை சுமந்து,
நீ கடந்த காலங்கள்,
நெஞ்சோடு தான் பதிந்து,
மறவாதே நொடி பொழுதும்.

நான் செய்யும் தவறனைத்தும்,
ஒரு நொடியில் தான் மறந்து,
மறுகணமே என் முடி கோதி,
சிரிப்புடனே நீ மன்னித்தாய்.

உன் ஆசைதனை மறந்து,
எனக்கெனவே நீ வாழ்ந்தாய்,
தனி ஒரு ஆளாக நீயிருந்து,
என்னை வளர்த்த என் தாயே.

இனிவரும் காலங்கள்,
உனக்கெனவே நான் வாழ்ந்து,
உனதாசை அத்தனையும்,
நிறைவேற்ற தான் முயுல்வேன்.மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :