கிறுக்கல்-53 | 26-01-2019
விடுமுறை நாட்களிலும்,
விடாமல் தான் உழைப்பார்.
பம்பரம் போல் சுழன்று,
கடமைகளை தான் முடிப்பார்.
கஷ்டங்கள் வந்தாலும்,
தன் தோள்மீது தான் சுமப்பார்.
துயரங்கள் தொடர்ந்தாலும்,
தளராமல் தான் இருப்பார்.
புத்தாடைகள் தான் அளித்து,
மகிழ்ச்சியில் மூழ்கடிப்பார்.
நாம் செய்யும் குறும்புகளை,
தொலைவிலிருந்தே தான் இரசிப்பார்.
பச்சிளம் குழந்தைப்போல் ,
எப்பொழுதும் தான் சிரிப்பார்.
தவறு ஏதும் செய்துவிட்டால்,
தவறாமல் தான் கண்டிப்பார்.
சிறுதுளி கண்ணீரையும்,
வராமல் தான் தடுப்பார்.
உயிர் போகும் நிலையிலையும்,
நம் குரல் கேட்கத்தான் துடிப்பார்.

முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 2 comments |
Nice
ReplyDeleteYar andha avar???
ReplyDelete