கிறுக்கல்-45 | 18-01-2019

உன் உருவத்தின் நிழலானேன்,
உன்னை பார்த்து தான் வளர்ந்தேன்,
தூரத்தில் என்னை பார்த்தால்,
அனைத்திடவே நீ அழைப்பாய்,
உன் தோள்களிள் நான் ஏற,
ஆசையுடன் தான் நடப்பாய்,
எனது ஆசைதனை நீயறிந்து,
கேட்காமல் தான் தருவாய்,
உன்னை அனைத்து நான் உறங்க,
உறங்காமல் தான் இரசிப்பாய்,
துயரெனவே நான் வந்தால்,
துடைத்தெறிய நீ இருப்பாய்,
ஒருபடி நான் உயர்ந்தால்,
உளமாற நீ மகிழ்வாய்,
உயிருக்கு உயிராக ,
என்னை நினைத்து நீ வளர்த்தாய்,
உயிர் ஊட்டிய என் இறைவா ,
உன்னை மறவேன் எந்நாளும்..

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 6 comments |

6 comments :