கிறுக்கல்-50 | 23-01-2019


கருவாக நீயிருந்த காலத்தில்,
கற்பனையில் நான் மிதந்து,
உன் உருவம் தனை வரைந்து,
உன் நினைவோடு தான் வாழ்ந்தேன்.

முதல் அழுகை தனை கேட்டு,
துடித்தெழுந்து உனை பார்க்க,
விரைந்தோடி தான் வந்தேன். 

மெல்லிய விரல் தொட்டு,
மெது மெதுவாய் உன்னை தூக்கி,
நெஞ்சோடு தான் அனைத்து,
நெடு நேரம் உன்னை இரசித்தேன்.

உன் மூச்சி என்னை மோத,
உன் சிரிப்பில் தான் மூழ்கி,
விளங்கா முடியா  காதலில்,
மெய் மறந்து தான் நின்றேன்.

உனது அருகில் நான் அமர்ந்து,
நீ உறங்க நான் இரசித்தேன்.
தூக்கத்தில் நீ அழுதால்,
துடித்திடவே நான் எழுவேன்.

உன் மழலை பேச்சினிலே,
நான் மூழ்கி மீளாமல் ,
என்னை‌ மறந்து உன்னை இரசித்தேன்..

நீ என்னை அனைத்திடவே ,
நிகழ்காலம் தனை மறந்து,
நிலவில் மிதப்பது போல்,
நான் உணர்ந்தேன்.

உனக்காக நான் வாழ்ந்து,
என் ஆயுள் முழுவதையும்,
உனக்கெனவே நான் தந்து,
நீ வாழ நான் மகிழ்வேன் :)
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 6 comments |

6 comments :

  1. அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போ டியைந்த தொடர்பு

    ReplyDelete