கிறுக்கல்-77 | 11-04-2019

ஓடி ஒளிவது வாழ்க்கையில்லை,
தேடி தீர்ப்பது தான் வாழ்க்கை !
அஞ்சி அஞ்சி வாழ்வது
வாழ்க்கையில்லை,
அச்சத்தை துறப்பது தான் வாழ்க்கை !
சோகங்களை சுமப்பது
வாழ்க்கையில்லை,
சோகங்களை கடப்பது தான் வாழ்க்கை !
தோல்வியில் துவள்வது வாழ்க்கையில்லை,
முயற்சியோடு முயல்வது தான் வாழ்க்கை !
வெற்றியில் திளைப்பது வாழ்க்கையில்லை,
பிறர் வெற்றிக்கு வித்தாவது தான் வாழ்க்கை !
வாழ்வதோ ஒருமுறை ! வாழ்வோம் !!!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 6 comments |

6 comments :