கிறுக்கல்-74 | 05-04-2019

தொட வேண்டும் என துணிந்தால்,
தொடுவானமும் ஓர் தூரமில்லை !
கடக்க வேண்டும் என துணிந்தால்,
பெருங்கடலும் ஓர் ஆழமில்லை !
சுமக்க வேண்டும் என துணிந்தால்,
இமயமும் ஓர் பாரமில்லை !
எதிர்க்க வேண்டும் என துணிந்தால்,
புயலும் ஓர் தடையில்லை !
வாழ்க்கையை பிடித்தாற் போல் வாழ,
எதுவுமே ஓர் தடையில்லை !!!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :