கிறுக்கல்-49 | 23-01-2019

வலியென்று நான் அழுதால் துடித்திட நீ!
வேண்டாம், துடைத்தாலே போதும்.
மெளனத்தில் நான் இருந்தால் பேசிட நீ!
வேண்டாம்,புன்னகையே போதும்.
தனிமையில் நான் நடந்தால் துணையாக நீ!
வேண்டாம், நினைவலையே போதும்.
துயரத்தில் நான் இருந்தால் மடிசாய நீ!
வேண்டாம், சிறு ஆருதலே போதும். 
உயிர் கொடுக்கும் உறவாக நீ! 
வேண்டாம், உண்மையான உறவே போதும்.மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :