கிறுக்கல்-34 | 11-01-2019


பலரோ கால் வயிற்று உணவுக்கு
கால் கடுக்க நடமாட
சிலரோ கால்மேல் கால்போட்டு,
காத்திருக்கும் உணவை கால் பாதி வீண் செய்து, விட்டெரியும் விந்தையினை யான் என் செய்வேன் ?
பலரோ உடுத்த உடையின்றி உறைபனியில்
அள்ளாட, சிலரோ பழையன கழிதல் வேண்டும் என சுட்டெரிக்கும் சிந்தனையை யான் என் செய்வேன் ?
பலரோ இருப்பதிற்கு இடமின்றி அலைபாய,
சிலரோ கடலோரத்தில் காற்று வாங்க வீடு என்றிருப்பதை யான் என் செய்வேன் ?
அடிப்படை‌யிழந்த மக்களுக்கு நடுவில்,
ஆடம்பரங்களை தவிர்க்க முற்படுவோம் !
மனிதம் காப்போம் !!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :