கிறுக்கல்-39 | 13-01-2019


இதழ்களில் தோன்றும் குறுநகை நீதானோ,
செவியில் கேட்கும் ரீங்காரம் நீதானோ,
விழிகளில் தெரியும் விடியல் நீதானோ,
கனவில் தோன்றும் காட்சிகள் நீதானோ,
இமைகாமல் பார்க்கும் அதிசயம் நீதானோ,
இதயத்தின் ஓசை காதல் நீதானோ,
உடலில் பாயும் செங்குருதி நீதானோ,
உயிர் அணுக்களின் குவியல் நீதானோ,
விரல்கள் மீட்டும் வீணை நீதானோ,
சிந்தனையில் செதுக்கிய சிற்பம் நீதானோ,
உடலில் சுரக்கும் ஹார்மோன் நீதானோ,
வெற்றியில் இரகசியம் நீதானோ !
அன்பே‌ நீதானோ !!!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :