கிறுக்கல்-43 | 16-01-2019

காற்றோடு காற்றாக தான் கரைந்து !
கிளைகள் ஒன்றோடு ஒன்று உரசி,
மீட்டும் ரீங்கார‌ ஓசையில் தான் மயங்கி!!
மரத்தடியில் தான் அமர்ந்து,
இயற்கையின் எழில்தனில் என்னை தொலைத்து !!!
பாய்ந்தோடும் அருவியில் கவலைகள் தனை மறந்து,
நீரோட்டம் தனில் நனைந்து !
சுள்ளிகள் தனை சேர்த்து,
மூட்டிய நெருப்பதனில் குளிர் காய்ந்து !!
இருட்டின் நடுவே விழும்,
நிலவொளியில் தான் நனைந்து !!!
சூழ்ச்சிகள் மிகுந்த மனிதர்கள்தனை தான் மறந்து,
வாழ்ந்திடவே ஆசை கொண்டேன் :) 

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :