கிறுக்கல்-40 | 13-01-2019

முன்பொரு காலத்தில் அச்சத்தின் அறுகுறியாம் !
முந்நூறு தசைகள் ஒன்றாகும் சங்ககமாம் !!
இரத்த நாளங்களை சீராக்கும்  வைத்தியராம் !!!
அழுத்தங்களும், கவலைகளும் வெளியேற்றும் தொழிலகமாம் !
மனதை உறுதியாக்கும் நல்லதொரு பயிலகமாம் !!
குழந்தைகளிடம் கற்க வேண்டிய தாரக மந்திரமாம் !!!
புன்முறுவல் செய்யவே பிறந்தோமே மன் மேலே !
கவலைகள் தனைமறந்து புரிவோமே புன்னகையை !!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :