கிறுக்கல்-61 | 24-02-2019


விடியலுக்கு முன்னரே!விழித்தெழு தமிழா!!
உன் வியர்வை துளிகள்,
வெற்றிக்கு விதையாகட்டும் !!!

தடைகள் பொடிபட ! தன்மானம் காத்திட!
வீர்கொண்டு வா தமிழா !!
உன் வீரம் இவ்வுலகிற்கு சான்றாகட்டும்!!!

இரத்தம் கொதித்திட ! யுத்தும் புரிந்திட!
படைக்கொண்டு வா தமிழா !!
எழுச்சியில் எதிரிகள் பொடியாகட்டும் !!!

அநீதியை அழித்திட ! தர்மம் நிலைத்திட!
சீற்றிட்டு வா தமிழா !!
வேள்வியில் அதர்மங்கள் அழியட்டும் !!!

துயரங்கள் விலகிட‌‌ ! உயரங்கள் தீண்டிட!
உறுதிக்கொண்டு வா‌ தமிழா !!
உழைப்பில் இவ்வுலகை நீ ஆண்டிட :)மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment