கிறுக்கல்-72 | 31-03-2019

என் விழியின் சோகங்களை
அறிந்தோரில்லை !
என் மௌனத்தின் அர்த்தங்களை
புரிந்தோரில்லை !
என் அன்பின் ஆழத்தை
அளந்தோரில்லை !
என் தனிமையின் வலிகளை
கடந்தோரில்லை !
என் கண்ணீரின் காரணங்களை
தெரிந்தோரில்லை !
என் இதயத்தின் வலிகளை
உணர்ந்தோரில்லை !
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

  1. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்

    ReplyDelete