கிறுக்கல்-67 | 22-03-2019


என் விழிகளின் ஏக்கங்கள் ?
தேவதையின் அம்சமென தோன்றும்
"உன் உருவம்"
என் செவிகளின் ஏக்கங்கள் ?
இசைப்போல் இனிக்கும்
"உன் குரல்"
என் கரங்களின் ஏக்கங்கள் ?
மணவறையில் கோர்த்திட தோன்றும்
"உன் மெல்லியகரங்கள்"
என் விரல்களின் ஏக்கங்கள் ?
மடிசாய்த்து தீண்டிட தோன்றும்
"உன் கருங்கூந்தல்"
என் இதயத்தின் ஏக்கங்கள் ?
மரண படுக்கையிலும் மறவாத
"உன் காதல்"
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :