கிறுக்கல்-68 | 25-03-2019


நம்மை மதிப்பவர்களிடம்,
"அன்புக்கொள்"
நம்மை மதிக்காதவர்களிடம்,
"விலகிக்கொள்"
அன்புடன் பழகும் மனிதர்களிடம், உறவுக்கொள் !
தோல்வியில் தோள் கொடுப்பவர்களிடம்,
"நன்றிக்கொள்"
நன்றி மறவா மனிதர்களிடம்,
"நட்புக்கொள்"
நேர்மை தவிரா மனிதர்களிடம்,
"மரியாதைக்கொள்"
பிறர் வலி உணரும் மனிதர்களிடம்,
"பகிர்ந்துக்கொள்"
மனிதர்கள் அனைவரும் சமம்யென்பதை,
"மனதில்கொள்"
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 6 comments |

6 comments :