கிறுக்கல்-66 | 21-03-2019துணிவோடு நடப்பவனுக்கு,
பாதையை எண்ணிய பயமில்லை !
நட்புக்களோடு ‌வாழ்பவனுக்கு,
தனிமையை எண்ணிய கவலையில்லை !
கொடுத்தே பழகியவனுக்கு,
இழப்பை எண்ணிய வருத்தமில்லை !
உழைப்பை நம்புபவனுக்கு,
தோல்வியை எண்ணிய பயமில்லை !
முயற்சியோடு முயல்பவனுக்கு,
முடிவயை எண்ணிய கவலையில்லை !
வாழ்க்கையை உணர்ந்தவனுக்கு,
எதை எண்ணியும் கவலையில்லை !


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :