கிறுக்கல்-70 | 27-03-2019

வலி எனக்கு புதிதல்ல ?
வலி தருபவர்கள் தான் புதிது !

தனிமை எனக்கு புதிதல்ல !
தனிமை தரும் அனுபவமே புதிது !

கண்ணீர் எனக்கு புதிதல்ல !
கண்ணீரின் காரணங்கள் தான் புதிது !

மனிதர்கள் எனக்கு புதிதல்ல !
அவர்களின் மாற்றங்கள் தான் புதிது !

வாழ்க்கையில் கஷ்டங்கள் புதிதல்ல !
அவை கற்றுத்தரும் பாடங்கள் புதிது !


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :