கிறுக்கல்-57 | 08-02-2019
நிறம் மாறும் மனிதர்கள் நடமாடும் பூமியில் !
நிஜம் தேடும் இதயமே ? சற்று நில் !
முகமூடி அணியாமல் நீ வாழ்ந்தால்,
உன்னை உடைத்தெறியும் உலகிது !!
நிஜம் தேடும் இதயமே ? சற்று நில் !
முகமூடி அணியாமல் நீ வாழ்ந்தால்,
உன்னை உடைத்தெறியும் உலகிது !!
பணத்தின் பின்னோடும் மனிதர்கள் நடமாடும் பூமியில் !
குணம் தேடும் இதயமே ? சற்று நில் !
பணம்யின்றி நீ வாழ்ந்தால்,
உன்னை துச்சமென தூக்கியெறியும் உலகிது!!
குணம் தேடும் இதயமே ? சற்று நில் !
பணம்யின்றி நீ வாழ்ந்தால்,
உன்னை துச்சமென தூக்கியெறியும் உலகிது!!
துரோகத்தில் ஊறிய மனிதர்கள் நடமாடும் பூமியில் !
நட்பை எதிர்நோக்கும் இதயமே ? சற்று நில் !
உயிர் கொடுக்கும் நட்பாக நீ வாழ்ந்தால்,
உன்னை முதுகில் குத்தும் உலகிது !!
நட்பை எதிர்நோக்கும் இதயமே ? சற்று நில் !
உயிர் கொடுக்கும் நட்பாக நீ வாழ்ந்தால்,
உன்னை முதுகில் குத்தும் உலகிது !!
ஊழலில் ஊறிய மனிதர்கள் நடமாடும் பூமியில் !
நேர்மையை தேடும் இதயமே ? சற்று நில் !
நீதி, நாயமென நீ வாழ்ந்தால்,
உன்னை நிர்மூலமாக்கும் உலகிது !!
நேர்மையை தேடும் இதயமே ? சற்று நில் !
நீதி, நாயமென நீ வாழ்ந்தால்,
உன்னை நிர்மூலமாக்கும் உலகிது !!
அதிகாரத்தை விரும்பும் மனிதர்கள் நடமாடும் பூமியில் !
அன்பை எதிர்நோக்கும் இதயமே?சற்று நில்
அன்புக்கு அடிமையாய் நீ வாழ்ந்தால்,
உன்னை அடக்கியாளும் உலகிது !!
அன்பை எதிர்நோக்கும் இதயமே?சற்று நில்
அன்புக்கு அடிமையாய் நீ வாழ்ந்தால்,
உன்னை அடக்கியாளும் உலகிது !!

முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 3 comments |
நன்றி 🙂
ReplyDeleteSuper...
ReplyDeleteநன்றி 🙂
Delete