மண்ணில் புதைந்திருக்கும் விதைப் போல்,

என்னுள் புதைந்திருக்கும் காதல்,

சிறு புன்னகை யாய் நீ தூர, முளைக்கும்!


அன்பை உரமாக்கி, அளவோடு தான்னிட்டு,

நித்தம் கவனமாய் நான் வளர்க்க,

மரமாகத் தான் மாறும் அக்காதல் !


அன்பே மலராய் பூத்துக்குளுங்கிட,

வண்ணத்துப்பூச்சாகி அவ்வன்பைப் பருகிட,

ஆயுள் கூடக் கண்டேன் !


இயற்க்கையளித்த இப்பரிசை,

கவனமாய் பாதுகாத்து,

எப்போழுதும் செழிக்கும் வழிச் செய்வேன்!




Leave a Comment Read More

நிலவொளி நீயென்றால்,

கருவிழியாய் நான்மாறி,

என்னுள் உன்னை சிறைப்பிடிப்பேன் !


பனித்துளி நீயென்றால்,

சூரியனாய் நான்மாறி,

உன்னை நான் அடைவேன் !


மழைநீர்  நீயென்றால்,

கடலாக நான்மாறி,

என்னுள் உன்னை சேர்ப்பேன் !


காற்றாய் நீயானால்,

கலைஞனாய் நான்மாறி,

உன்னை நான் இசைப்பேன் !


இரவாக நீயானால்,

கனவாக நான்மாறி,

என்னுள் நான் நிறைவேன் !


தமிழாய் நீயானால்,

கவியாய் நான்மாறி,

காவிய கவி படைப்பேன்



Leave a Comment Read More
மறுநொடி மர்மங்கள்அவிழா ,
வியப்பூட்டும் வாழ்விது !
கதிரவனே காரிருளில் மூழ்க,
நாம் என்ன விதிவிலக்கா ?!
நம் துன்பங்கள் யாவும்
கணநொடியில் கரைந்து போகலாம்!
நம்பிக்கையோடு நகர்வோம் !


1 comment Read More
இறப்பை தவிர,  பிற யாவும் !
முயற்சித்தால் திரும்ப பெற கூடியதே !!


Leave a Comment Read More
எழுதப்பட்டவையே யாவும் !எதையிழந்தாலும் கவலையின்றி,
நடப்பவை நடக்கட்டும் என்பதே வாழ்க்கை !!


Leave a Comment Read More
அறிவென்னும் அகந்தை கொள்ளும்,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
                 "மறவாதீர்"
கர்வமென்னும் காரிருள் சூழ்ந்த,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
                " மறவாதீர்"
செல்வத்தில் செருக்கேறிய ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
                "மறவாதீர்"
புறம்பேசும் புலமைப்படைத்த ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
               "மறவாதீர்"
பொய்மையில் பொருளிட்டும் ‌,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!   
                "மறவாதீர்"
மண்ணோடு மண்ணாகி ,
புழுவிற்கு உறமாகும் மனிதர்களே  !!
   "மறவாதீர் மானிடும் போற்ற "


Leave a Comment Read More

போராடி தோற்றாலும் !
துயரங்கள் தொடர்ந்தாலும் !!
உண்மைகள் பொய்த்தாலும் !
உறவுகள் பிரிந்தாலும் !!
கண்ணீரை கவனமாக மறைத்துவிடுகிறேன்!
கண்ணீரை கவனமாக மறைத்துவிடுகிறேன்!
கண்ணீரின் காரணம் யாதெனினும் !!
அதை கவனமாக மறைத்துவிடுகிறேன் !!!




Leave a Comment Read More
தோல்வியில் தோள் கொடுப்பவனும் !
வெற்றியில் விலகி நிற்பவனுமே !!
உண்மை நண்பன் 👆


1 comment Read More
தோல்வியை தன் தோள் மீதும் !
வெற்றியை பிறர் தலை மீதும் !!
சூடுபவனே தலைவன்👆


Leave a Comment Read More
நீங்கள் சுமக்கும்,
கண்ணீரையும் !
தோல்விகளையும் !!
அவமானங்களையும் !!!
உன்னுள் புதைத்திடு...
ஒருநாள் வெற்றியாக முளைத்தே தீரும்‌ 🔥


Leave a Comment Read More

அன்பினில் அறிவையும் !!
அறிவினில் அன்பையும் !!
தவிர்த்தல் நன்று !!!


2 comments Read More
நேர்மையென்னும் ஆயுதத்தில்,
அன்பென்னும் அம்பினை பூட்டி !
இலக்கை நோக்கி நகர்ந்தால்,
வெற்றியென்னும் இரையை ருசிக்கலாம் !!


4 comments Read More
தேவைகள் தீர்ந்த பின்,
தேடிய யாவும் ? தேவையற்றவையே !!!
தேடி தேடி சேர்க்காமல் ?!
தேவைகளோடு வாழ்பவர்களின்,
தேவைகளை தீர்ப்போம் !!!


Leave a Comment Read More
முட்டி மோதி ! உலகை எட்டி பார்க்கும்,
பறவை குஞ்சு ஒன்றை கண்டேன் !!
நித்தம் போராடி ! அதன் சிறகை விரித்து, வானில் பறக்க கண்டேன் !!
உணவை தேடி !
ஓயாமல் உழைப்பதை கண்டேன் !!
உழைத்து களைத்தும் !
உணவை பகிர்ந்து உண்ண கண்டேன் !!
தான்னென்று நில்லாமல் !
தன்னலம் கருதாமல் , வாழ கண்டேன்!!
எத்தனை பொறாமை என்னுள் !!!
எத்தனை பொறாமை என்னுள் !!! பறவையே😊



1 comment Read More
பணம் மறந்த பாதசாரியாய்,
சில நாள் !!
சுற்றி திரியும் பறவையாய்,
சில நாள் !!
பச்சிளம் குழந்தையின் புன்னகையாய்,
சில நாள் !!
மண்ணுக்கு உரம் சேர்க்கும் புழுவாக,
சில நாள் !!
இளைப்பாற நிழல் தரும் மரமாக,
சில நாள் !!!
கள்ளம் கபடமற்ற மனிதனாய்,
சில நாள் !!
வாழ்ந்திடவோ ஆசை !?
வாழ்ந்திடவோ ஆசை !?


Leave a Comment Read More
வலிகள் யாவும் வரிகளாக,
மாறிட கண்டேன் 😔
விழிகள் யாவும் கண்ணீரில்,
மூழ்கிட கண்டேன் 😔
காதல் யாவும் காற்றில்,
கரைந்திட கண்டேன் 😔
புன்னகை யாவும் புதையலாய்,
தோன்றிட கண்டேன் 😔
சிந்தனை‌கள் யாவும் ஒன்றாக,
சிதறிட கண்டேன் 😔
ஏமாற்றங்கள் யாவும் மனதை கல்லாய்,
மாற்றிட கண்டேன் 😔
மனிதர்கள் யாவரும் நிமிடங்களில்,
மாறிட கண்டேன் 😔
எத்தனை மாற்றங்கள் என்னுள் !!!
வாழ்க்கை இதுதானோ ?
வாழ்க்கை இதுதானோ ?😔😣


1 comment Read More
தட்டி பறிக்கும் தந்திர‌
உலகிது !
வித்தைகள் அரங்கேற்றும் நாடக
உலகிது!
ஆளுமை செலுத்தும் அதிகார
உலகிது !
புறம் பேசும் பொல்லாத
உலகிது !
பொய்மையை போற்றும் பொய்யான
உலகிது !
நேர்மையை நசுக்கும் நாசகார
உலகிது !
இவையில்லா உலகத்தை இனி
படைத்தாலும் ?
மனிதன் மாறுவானோ ??
மனிதன் மாறுவானோ ??? 


1 comment Read More
எதிர்பார்க்கும் உலகத்தில்,
எதார்த்தமாக நாம் வாழ்ந்தால்,
ஏமாற்றமே !

புறம்பேசும் உலகத்தில்,
செவிடாக நாம் வாழ்ந்தால்,
நிம்மதியே !

தரமற்ற உறவுகளிடம்,
விலகியே நாம் வாழ்ந்தால்,
தன்மானமே !

பொறாமை நிறைந்த உலகத்தில்,
பொதுப்படையாக நாம் வாழ்ந்தால்,
மனிதமே !

தோல்விகள் நிறைந்த உலகத்தில்,
போராடி நாம் வாழ்ந்தால்,
வெற்றியே !


2 comments Read More
நான் கொண்ட தேவைகளோ சிறிது ! தேடல்களோ பெரிது !!
நான் கொண்ட அறிவோ சிறிது !
அன்போ பெரிது !!
நான் கொண்ட செல்வங்களோ சிறிது !
மனதோ பெரிது !!
நான் கொண்ட நண்பர்களோ சிறிது !
எதிரிகளோ பெரிது !!
நான் கொண்ட வெற்றிகளோ சிறிது ! தோல்விகளோ பெரிது !!
நான் கொண்ட தத்துவங்களோ மிக சிறிது !
அதன் ஆழங்களோ மிக பெரிது !!


2 comments Read More

வாழ்வில்! இலக்கென்று எதுமில்லை ?
எட்டி பிடிப்பதற்கு !!!
வாழ்வில் ! இழப்பதற்கு எதுமில்லை ?
பயந்து பணிவதற்கு !!!
வாழ்வில் ! சோகங்கள் எதுமில்லை ?
சோர்ந்து போவதற்கு !!!
வாழ்வில் ! சுமையென்று எதுமில்லை ?
சுமந்து செல்வதற்கு !!!
வாழ்வில் !எனக்கென்று யாருமில்லை?
விட்டு விலகுவதற்கு !!!
வாழ்க்கையின்மேல் பெரியதொரு பற்றில்லை ?
வாழ்ந்து பார்ப்பதற்கு !!!


5 comments Read More