விடியலுக்கு முன்னரே!விழித்தெழு தமிழா!!
உன் வியர்வை துளிகள்,
வெற்றிக்கு விதையாகட்டும் !!!
தடைகள் பொடிபட ! தன்மானம் காத்திட!
வீர்கொண்டு வா தமிழா !!
உன் வீரம் இவ்வுலகிற்கு சான்றாகட்டும்!!!
இரத்தம் கொதித்திட ! யுத்தும் புரிந்திட!
படைக்கொண்டு வா தமிழா !!
எழுச்சியில் எதிரிகள் பொடியாகட்டும் !!!
அநீதியை அழித்திட ! தர்மம் நிலைத்திட!
சீற்றிட்டு வா தமிழா !!
வேள்வியில் அதர்மங்கள் அழியட்டும் !!!
துயரங்கள் விலகிட ! உயரங்கள் தீண்டிட!
உறுதிக்கொண்டு வா தமிழா !!
உழைப்பில் இவ்வுலகை நீ ஆண்டிட :)
Leave a Comment Read More
பொய்மையை புறம்தள்ளி,
மெய்யின் பின்னோடும் மனமிது !
காரணங்களை தேடாமல்,
காரியங்களை நிறைவேற்றும் மனமிது !
அறிவை புறம்தள்ளி,
அன்பின் பின்னோடும் மனமிது !
குறைகளை தேடாமல்,
நிறைகள் நிறைந்திருக்கும் மனமிது !
அகந்தையை புறம்தள்ளி,
அன்போடு பழகும் மனமிது !
வலிகள் பல சுமந்தாலும்,
புன்னகையை மறவா மனமிது !
தோல்விகளை புறம்தள்ளி,
வெற்றியின் பின்னோடும் மனமிது !
தோல்விகள் தொடர்ந்தாலும்,
முயற்சியை கைவிடா மனமிது !
1 comment Read More
வறுமையில் வாழ்வோரை வாழ்விக்க,
நாம் முயல்வோம் !
பிறர் வலி உணர்ந்து எப்பொழுதும்,
நாம் வாழ்வோம் !
தனிமையில் தவிப்போரை தாங்கிடவே,
நாம் சேர்வோம் !
துயரெதுவும் தொடராமல் வாழ்ந்திட,
நாம் வழிசெய்வோம் !
துரோகத்தில் வீழ்ந்தோரை விழித்தெழவே,
நாம் முயல்வோம் !
அன்புக்கு ஏங்குவோருக்கு அடைகளமாய்,
நாம் வாழ்வோம் !
அறம் செய்தே நம் வாழ்வை எப்பொழுதும்,
நாம் வெல்வோம் !
1 comment Read More





