என் விழிகளின் ஏக்கங்கள் ?
தேவதையின் அம்சமென தோன்றும்
"உன் உருவம்"
என் செவிகளின் ஏக்கங்கள் ?
இசைப்போல் இனிக்கும்
"உன் குரல்"
என் கரங்களின் ஏக்கங்கள் ?
மணவறையில் கோர்த்திட தோன்றும்
"உன் மெல்லியகரங்கள்"
என் விரல்களின் ஏக்கங்கள் ?
மடிசாய்த்து தீண்டிட தோன்றும்
"உன் கருங்கூந்தல்"
என் இதயத்தின் ஏக்கங்கள் ?
மரண படுக்கையிலும் மறவாத
"உன் காதல்"




2 comments Read More


துணிவோடு நடப்பவனுக்கு,
பாதையை எண்ணிய பயமில்லை !
நட்புக்களோடு ‌வாழ்பவனுக்கு,
தனிமையை எண்ணிய கவலையில்லை !
கொடுத்தே பழகியவனுக்கு,
இழப்பை எண்ணிய வருத்தமில்லை !
உழைப்பை நம்புபவனுக்கு,
தோல்வியை எண்ணிய பயமில்லை !
முயற்சியோடு முயல்பவனுக்கு,
முடிவயை எண்ணிய கவலையில்லை !
வாழ்க்கையை உணர்ந்தவனுக்கு,
எதை எண்ணியும் கவலையில்லை !


2 comments Read More
தடைகளுக்கு அஞ்சாமல் !
      தன்நலம் பாராமல் !
தலைகணம் இல்லாமல் !!
      தற்பெருமை கொள்ளாமல் !
தன்மானம் குன்றாமல் !
      தர்மம் தோற்காமல் !!
தவறுகள் புரியாமல் !
      தரம் தாழாமல் !!
வாழ்பவனே உயர்ந்த மனிதன் :)

3 comments Read More

முடிந்தால் நால்வரை
என்‌ தோள்களில்‌ சுமப்பேனேயின்றி ,
"ஒருநாளும்" பிறர் தோள்களுக்கு
சுமையாகேன் !!!



Leave a Comment Read More

கடினமாக நீ உழைத்தால்,
கண்ணியத்தோடு வாழலாம் !
துணிவுடன் நீ நடந்தால்,
துயரங்கள் போக்கலாம் !!

பணிவுடன் நீ வாழ்ந்தால்,
பண்பாலன் ஆகலாம் !
கோவங்கள் நீ தவிர்த்தால்,
குணாலன் ஆகலாம் !!

விடாமல் நீ முயன்றால்,
வெற்றியாலன் ஆகலாம் !
உண்மையாக நீ உழைத்தால்,
தலைவன் ஆகலாம் !!


7 comments Read More