கிறுக்கல்-76 | 08-04-2019

யார் மனிதன் ?
தனக்கெனவே வாழாமல் ,
பிறருக்காகவும் வாழ்பவனே, மனிதன் !
தன் பசி போக்கியதும் ,
பிறர் பசியை என்னுபவனே, மனிதன் !
தள்ளாடும் மனிதர்களை,
கரம் கொண்டு தாங்குபவனே, மனிதன் !
கடமையை மீறாமல்,
கண்ணியமாக வாழ்பவனே,மனிதன்!
பிறர் உழைப்பில் வாழாமல்,
தன் உழைப்பில் வாழ்பவனே , மனிதன் !
வஞ்சங்கள் சுமக்காமல்,
அன்பில் வாழ்பவனே ,மனிதன் !
பிறர் உணர்வுகளுக்கு,
மதிப்பளித்து வாழ்பவனே, மனிதன் !
வாழ்வின் ஏற்ற தாழ்வுகள்,
சமமென உணர்ந்தவனே,மனிதன் !
மனிதனாக வாழ முயற்சிப்போம்,
மனிதநேயம் காப்போம் !


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :